கட்டை விரல் எடுத்துவிட்டார்கள், திருமணம் ஆகவில்லை, மனைவி, குழந்தைகள் இருந்திருந்தால்- பாவா லட்சுமணன் எமோஷ்னல் பேச்சு
பாவா லட்சுமணன்
தமிழ் சினிமாவில் இடம்பெற்ற சில முக்கியமான காமெடி காட்சிகளில் நடித்து மக்களிடம் ரீச் பெற்றர் பாவா லக்ஷ்மணன். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.
தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நோயின் தாக்கத்தால் இவரது கட்டை விரலை நீக்கியுள்ளனர். இந்த நேரத்தில் தான் பாவா லக்ஷ்மணன் எமோஷ்னலாக பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
நடிகரின் பேட்டி
அதில் அவர், சுகர் அதிகமானதால் கடந்த 10 நாட்களாக ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுறு வருகிறேன். கட்டை விரலை எடுத்துவிட்டார்கள், காயம் சரியாக 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என சொன்னார்கள்.
வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் நண்பர்கள் உதவியால் வாழ்கிறேன், கடந்த 6 மாதமாக பட வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை. கட்டை விரல் எடுத்த வலியை விட வாய்ப்பு கிடைக்காதது தான் பெரிய வலியாக இருக்கிறது.
இப்போது இங்கே எல்லா விஷயத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள், ஆனாலும், டிஸ்சார்ஜ் ஆன பிறகும் மருந்து, மாத்திரைகள், சாப்பாடு செலவு என்று ஏகப்பட்ட செலவிருக்கிறது.
எனக்கு இப்போது 58 வயதாகிறது, திருமணமே பண்ணிக் கொள்ளவில்லை, குழந்தைகள் இருந்தால் நான் ஏன் உதவி கேட்க போகிறேன். அதனால் திரைத்துறையிடம் உதவியை எதிர்ப்பார்க்கிறேன் என வேதனையுடன் கூறியிருக்கிறார்.
இனி Colors Tamil தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல்- ரசிகர்கள் ஷாக்