இனி Colors Tamil தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல்- ரசிகர்கள் ஷாக்
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலியில் படு ஹிட்டான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடரில் சுசித்ரா மற்றும் கோபி முக்கிய பிரபலங்களாக நடித்து வருகிறார்கள்.
கதையில் பழனிச்சாமி என்ற கதாபாத்திரம் வந்ததில் இருந்து கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த வாரம் கொஞ்சம் சீரியஸ், பின் கோபியின் கலாட்டா என்று சென்றது.

மீண்டும் பாக்கியலட்சுமி
இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறதாம், இதைக் கேட்டதும் ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆகியுள்ளனர்.
ஆனால் என்ன விஷயம் என்றால் கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரண்டு தொடர்கள் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் இரண்டு தொடர்களில் ஒரு தொடருக்கு பாக்கியலட்சுமி என பெயர் வைத்துள்ளனர்.
பெயர் மட்டுமே ஒன்று, இரண்டும் வெவ்வேறு கதைகள்.
விஜய்யின் யூத் பட நடிகையா இது, 13 வயதில் மகள் உள்ளாரா?- லேட்டஸ்ட் வீடியோ 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    