10 பேர் என்ன அடிக்க வந்துட்டாங்க.. அஜித் தான் என்னை காப்பாற்றினார்.. பிரபல நடிகர் பேட்டி
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் வெளிவந்தாலும், வசூலில் மாபெரும் வெற்றியை பெற்றது GBU தான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து அஜித் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் உள்ள பலரும் அஜித் குறித்து பல விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் அவர் எப்படி இருப்பார், அவர் செய்த உதவிகள், அவருடைய பழக்கவழக்கம் என அவரை பக்கத்தில் இருந்து அஜித்தை பார்த்தவர்கள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.
பிரபல நடிகர் பேட்டி
இந்த நிலையில், அஜித்துடன் பணிபுரிந்த நடிகர்களில் ஒருவரான பாவா லட்சுமணன், சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார்.

இதில் "ஜனா பட படப்பிடிப்பு பார்டர் தோட்டத்தில் நடக்குது, 100 பேருக்கு மேல மொட்ட போட்டுட்டு வந்துட்டாங்க. நான் போய் சார் கிட்ட சொன்னேன். ஏண்டா மொட்ட அடிசீங்கன்னு கேட்டாரு, தல நீங்க மொட்ட போட்டீங்க அதான் நாங்க மொட்ட போட்டோம் சொன்னாங்க. சலிக்காமல் எல்லார் கூடவும் மேல கை போட்டு போட்டோ எடுத்தாரு. நான் ஒருத்தர் ஒருத்தரா விளக்கி விடுவேன். அப்புறம் சார் சாப்பிட போய்ட்டாரு, நான் வந்துட்டே இருக்கேன் என்னனு தெரியல 10 பேர் என்ன அடிக்க வந்துட்டாங்க. நான் ஓடிப்போய் அஜித் சார் கிட்ட சொன்னேன். நீங்க என்ன பாக்க வந்தீங்க, பாத்தீங்க போட்டோ எடுத்தீங்க, அவர் அவரோட வேலைய செஞ்சாரு, அவரை ஏண்டா அடிக்க வரீங்க போங்கடானு சொன்னாரு, ஒரு வார்த்தை கூட பேசாம போய்ட்டாங்க" என கூறியுள்ளார்.