விஜய் டிவி சொல்லியும் கேட்காத அமீர்! பாவனி சொன்ன ஷாக்கிங் விஷயம்
பிக் பாஸ் 5 ஷோவில் பங்கேற்ற அமீர் - பாவனி தற்போது பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவில் கலந்துகொண்டு நடனமாடி ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர்.
அமீர் பாவனி
அவர்கள் நிஜத்திலேயே காதலிப்பதும் உறுதியாகிவிட்ட நிலையில் கடந்த எபிசோடில் அவர்கள் திருமணம் செய்து கொள்வது போன்ற டான்ஸ் performance வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் தற்போது "அமீர் முட்டியில் அடிபட்டு காயத்துடன் தான் நடனம் ஆடினார், சேனல் சொல்லியும் கேட்கவில்லை" என பாவனி கூறி இருக்கிறார்.
விஜய் டிவி சொல்லியும் கேட்காத அமீர்
அமீர் முழங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர் அளித்த reportஐ பாவனி ஷேர் செய்திருக்கிறார். டான்ஸ் ஆடாமல் விடுப்பு எடுத்து கொள்ளலாம் அல்லது வீல் சேரில் அமர்ந்து டான்ஸ் ஆடலாம் என சேனல் கொடுத்த இரண்டு ஆப்ஷன்களையும் அமீர் ஒதுக்கி வைத்துவிட்டு வழக்கம்போல காயத்திலும் வலியை பொறுத்துக்கொண்டு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
மேலும் அமீர் - பாவனி ஜோடி பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் இருந்து விலக போகிறார்கள் என வந்த செய்தியும் உண்மை இல்லை என கூறி இருக்கின்றார்.
நயன்தாரா - விக்கியின் இரண்டாவது ஹனிமூன்.. ஏற்பாடுகளை செய்த பிரபலம் யார் தெரியுமா