அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டி சென்றவர் இவர் தான் !
பிக்பாஸ் அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ், அந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நிறைவுக்கு வர பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
புதிய முயற்சியாக அந்த நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்தது, அதற்கு ரசிகர்களும் ஆதரவை அளித்திருந்தனர்.
மேலும் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் அவர் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
டைட்டில் வின்னர்
இந்நிலையில் 70 நாட்களை கடந்து நிறைவுக்கு வந்துள்ள இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது.
மேலும் இந்த இறுதி போட்டியில் பாலா, நிரூப், ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இடையே தான் கடும் போட்டி இருந்தது.
ஆனால் நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஷூட்டிங்கில் மக்களின் அதிக வாக்குகளை பெற்று இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார்.
மார்டன் லுக்கில் அசத்தும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..