குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முக்கிய பிரபலம் !
திரைப்படத்தில் CWC ரித்விகா
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ரித்விகா.
ராஜா ராணி, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரித்விகா. குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாக மாறினார்.
இந்நிலையில் தற்போது இவர் தமிழ் சினிமாவிற்கும் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். ஆம், சதிஷ் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் சட்டம் என் கையில்.
இப்படத்தில் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பீஸ்ட் படத்திற்காக தளபதி விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டும் இத்தனை கோடி !