சிம்பு புதுசு.. அவருக்கு பிக் பாஸில் எதுவும் புரியாது! மீண்டும் வார்த்தையை விட்டு சிக்கலில் அனிதா சம்பத்
கமல்ஹாசன் பாதியிலேயே வெளியேறிய நிலையில் தற்போது சிம்பு தான் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஷோ சுவாரஸ்யமாக இல்லை என சிம்பு ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட்
இன்னும் சுவாரஸ்யமாக விளையாடுங்கள் என சிம்பு போட்டியாளர்களுக்கு தொடர்ந்து அட்வைஸ் மட்டுமின்றி எச்சரிக்கையும் கொடுத்துவிட்டார். ஆனாலும் கடந்த வாரம் வரை ஷோ போர் அடிக்கும் விதத்தில் தான் இருக்கிறது.
இந்த வாரம் கோழி அடைகாக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் நிரூப் vs பாலா பிரச்சனை வெடித்து இருக்கிறது.
சிம்புவுக்கு எதுவும் தெரியாது: அனிதா சம்பத்
இந்நிலையில் சிம்புவுக்கு பிக் பாஸ் புதிது என்பதால் புரியாது என அனிதா சம்பத் பேசி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
"கமல் ஐந்து சீசன் இருந்ததால் அவருக்கு எல்லாம் புரியும்.நாம் இதற்கு முன்பே ஒரு சீசன் இருந்திருக்கிறோம். சிம்பு தற்போது தான் பிக் பாஸ் ஷோவுக்கு புதிதாக வந்திருக்கிறார் என்பதால் அவருக்கு deep ஆக புரியாது" என அனிதா சம்பத் கூறி இருக்கிறார்.
ஏற்கனவே அனிதா கெட்ட வார்த்தை பேசிய வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
Ivanga romba depth ana point sonnangalam athu STR ku puriyatham! ???♀️#BiggBossTamil #BBUltimate #BiggBossUltimate pic.twitter.com/YuIZPt6Sp2
— Stone Heart (@Stonecoldhrt) March 13, 2022
பிரம்மாண்ட இயக்குனரை சந்தித்த அல்லு அர்ஜுன்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்