பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 6 பைனலிஸ்ட் இவர்களா?- ஜெயிக்கப்போவது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சினிமாவில் பெரிய எதிர்ப்புகளுக்கு இடையில் தொடங்கியது. முதல் சீசன் பெரிய சர்ச்சைகளில் எல்லாம் சிக்க அடுத்தடுத்து 5 சீசன்கள் சுமூகமாக முடிந்தது.
பிக்பாஸ் அல்டிமேட்
5வது சீசன் முடிந்த கையோடு அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 5 சீசன்கள் வரை பங்குபெற்ற போட்டியாளர்கள் கலந்துகொள்ள ஒரே அதிரடி சரவெடியாக இருந்தது.
சிம்பு தொகுத்து வழங்க ஆரம்பித்ததில் இருந்து நிகழ்ச்சி கொஞ்சம் சுறுசுறுப்பாக சென்றது. வரும் ஏப்ரல் 10ம் தேதி நிகழ்ச்சியின் பைனல் நடக்க இருக்கிறது, இதில் யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை.
6 பைனலிஸ்ட்
இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் பைனலுக்கு செல்ல இருக்கிறார்கள். பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி என 6 பேர் தேர்வாகியுள்ளனர்.
இவர்களில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ஜெயிக்க அதிக வாய்ப்பு பாலாஜி முருகதாஸிற்கு உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பெரிய பட்ஜெட்டில் தயாரான RRR படத்தின் இதுவரையிலான முழு வசூல்- செம கலெக்ஷன்