தீனாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சீசன் 3 பிரபலம் ! அட இவரா..
பிக்பாஸ் அல்டிமேட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து BB அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
மேலும் இந்த BB அல்டிமேட் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே எதிர்பார்த்தளவு வரவேற்பை பெறவில்லை.
அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது.
அடுத்த போட்டியாளர்
இந்நிலையில் பெரிய வரவேற்பை பெற தவறிய இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பை கூட்ட KPY பிரபலம் தீனா நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
அவர் வீட்டிற்குள் சென்று ஒரே நாளே ஆகியுள்ள மேலும் ஒரு பிரபலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், பிக்பாஸ் சீசன் 3 ரன்னர் அப் ஆன டான்ஸ் மாஸ்டர் சாண்டி தான் BB அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர் என தெரியவந்துள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள RRR படம் எப்படி உள்ளது- Live Updates