இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா?- வெளிவந்த விவரம்
கடந்த ஜனவரி 30ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சி கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 60 முதல் 70 நாட்கள் வரை நிகழ்ச்சி ஓடும் என்றனர்.
அடுத்தடுத்த மாற்றம், எலிமினேஷன்
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுரேஷ், சுஜா, ஷாரிக், அபிநய், தாடி பாலாஜி, சினேகன், அனிதா, சுரேஷ் என அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினார்கள்.
முதல் ஆளாக வீட்டைவிட்டு வெளியேறிய சுரேஷ் மீண்டும் வீட்டிற்குள் வர உடல்நலக் குறைவால் வெளியேற்றப்பட்டார். அதேபோல் வனிதாவும் தானாக முன்வந்து வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
அதேபோல் நடிகர் கமல்ஹாசன் சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற சிம்பு என்ட்ரீ கொடுத்தார்.
இந்த வார எலிமினேஷன்
இந்த வாரம் பாலாஜி, நிரூப், ஜுலி, தாமரை, ஸ்ருமி. ரம்யா, அபிராமி எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள். இவர்களில் இதுவரை அபிராமி குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறார்.
எனவே அவர் வெளியேறலாம் அல்லது அவரை விட சில வாக்குகள் வித்தியாசம் உள்ள ரம்யா பாண்டியன் வெளியேறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அட்டை படத்திற்காக ஆடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை சமந்தா- ஷாக் ஆன ரசிகர்கள்