வெளியாகும் முன்பே பல கோடி லாபம் ! பீஸ்ட் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்..
பீஸ்ட் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்
தளபதி விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்னும் 4 நாட்களில் வெளியாக இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனால் அப்படம் முதலில் நாளிலே பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பே பல இடங்களில் பெரிய வியாபாரத்தை செய்துள்ளது.
அதன்படி பீஸ்ட் திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.175 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் ரூ.220 கோடிக்கு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை வைத்து பார்க்கையில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.45 கோடியை லாபமாக எடுத்துள்ளது. இதனால் படம் வெளியான பின்பு எந்தளவிற்கு வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை தட்டி சென்றவர் இவர் தான் !