பீஸ்ட் படத்தின் BGM அப்பட்டமான காப்பியா ! இணையத்தில் பரவி வரும் வீடியோ..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது, இதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே பெரிய எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது, மாஸ்ஸான காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ள பீஸ்ட் ட்ரைலர் பார்வைகளை குவித்து வருகிறது.
BGM காப்பியா

இந்நிலையில் தற்போது பீஸ்ட் ட்ரைலரில் அனிருத் இசையில் வந்துள்ள BGM அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதே சமயம் அந்த BGM காப்பி எனவும் தகவல் பரவி வருகிறது. ஆம் அதன்படி பீஸ்ட் ட்ரைலரில் வரும் BGM (Ad Kolima Demeter) என்ற ஒரு மியூசிக்கின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டு பிடித்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
பீஸ்ட் ட்ரைலரை பார்த்துவிட்டு KGF இயக்குனர் கொடுத்த ரியாக்ஷன் ! வைரல் ட்வீட்..