பீஸ்ட் படத்தின் காலை 4 மணி காட்சி டிக்கெட் புக்கிங் துவங்கியது.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்
பீஸ்ட்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை, தமிழ் திரையுலகமே வைத்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

டிக்கெட் புக்கிங்
ஓரிரு நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல வெற்றி திரையரங்கில் பீஸ்ட் படத்திற்கான முன் பதிவு துவங்கியது. ஆனால், சில மணி நேரங்களேயே அதனை கிளோஸ் செய்துவிட்டனர்.
இந்நிலையில், துபாயில் தற்போது பீஸ்ட் படத்தின் முதல் நாள் 4 மணி காட்சிக்கான ஷோ புக்கிங் துவங்கியுள்ளது.

இதனால், தமிழகத்திலும் விரைவில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் ஷோவின் முன் பதிவு துவங்கும் என்று ரசிகர்களால் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
Indian Time 4.00 AM
