விஜய் கலந்துகொள்ளும் சன் டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
நெல்சன் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய்
இப்படத்திற்காக கடந்த 9 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் நடிகர் விஜய். சன் டிவி ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ஒளிபரப்பு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
தொகுப்பாளராக நெல்சன் திலிப்குமார்
அதன்படி, தளபதி விஜய் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தானாம். விஜய் மற்றும் நெல்சனின் கலகலப்பான கலந்துரையாடல் தான் இந்த நிகழ்ச்சி என்று தகவல் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 15 லட்சத்தை அடித்தது யார்?- அட இவரா?