விஜய்யின் பீஸ்ட் பட கலெக்ஷன் முதல்நாள் மட்டும் இவ்வளவு இருக்குமா?- வலிமை விட அதிகமா?
நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் பீஸ்ட் படம் குறித்து தான் எல்லா இடங்களிலும் பேச்சு. வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் பிரம்மாண்டமாக ரிலீஸ். சன் பிக்சர்ஸ் படத்தை பெரிய அளவில் புரொமோட் செய்து வருகிறார்கள்.
பீஸ்ட் ஸ்பெஷல் ரிலீஸ்
இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக், 2 பாடல்கள் டீஸர், டிரைலர் என வெளியாகிவிட்டது, நேற்றில் இருந்து படத்தின் தொலைக்காட்சி புரொமோக்களும் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டன.
இன்று மாலை கூட படத்தில் இடம்பெறும் 3வது பாடலின் டீஸர் வெளியாக இருக்கிறது, அப்பாடல் என்னென்ன சாதனைகளை செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வலிமை Vs பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் பட டிக்கெட் புக்கிங் நடந்துவரும் நிலையில் முதல் நாள் தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 35 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 36.7 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட பீஸ்ட் பட சர்ச்சை போஸ்டர்- செம வைரல்