விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட பீஸ்ட் பட சர்ச்சை போஸ்டர்- செம வைரல்
விஜய் இந்திய சினிமா கொண்டாடும் பாக்ஸ் ஆபிஸ் நாயகன். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது, பட வேலைகளும் மாஸாக நடக்கின்றன.
முன்பதிவு வசூல் விவரங்கள்
பீஸ்ட் படம் வெளிநாட்டில் முன்பதிவில் இதுவரை ரூ. 1 கோடிக்கு வசூலித்திருக்கிறதாம், தமிழ்நாட்டில் முன்பதிவு வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர்.
தமிழகத்தில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் 800 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகிறதாம், எங்கு பார்த்தாலும் டிக்கெட்டிற்கு பெரிய தட்டுப்பாடு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.
புதுச்சேரியில் வைத்த போஸ்டர்
பீஸ்ட் படத்திற்காக புதுச்சேரியில் உள்ள ரசிகர்கள் படு குஷியில் உள்ளார்கள். அவர்கள் பீஸ்ட் படத்திற்காக புதுச்சேரி முதல்வருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
தற்போது இந்த போஸ்டர் விவகாரம் மிகவும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்துடன் சண்டை போட்டது உண்மையா?- பாலாவே சொன்ன உண்மை தகவல்