USAவில் அடி பாதாளத்திற்கு சென்ற விஜய்யின் பீஸ்ட் வசூல்- தெறிக்கும் வசூலில் KGF 2, RRR
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதி விஜய்யின் பீஸ்ட் மற்றும் யஷ் நடித்த KGF 2 என இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்கள் வெளியாகின.
இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கும் என பார்த்தால் விஜய்யின் பீஸ்ட் பின்வாங்கிவிட்டது, காரணம் படத்தை கதைக்களம் சரியில்லை என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால் அதையெல்லாம் படக்குழு கண்டுகொள்ளவே இல்லை, விஜய் என்ற பெயரிலேயே படம் நல்ல வசூலை ஈட்டிவிட்டது. அண்மையில் நடிகர் விஜய் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் செம வைரலானது.
இன்னொரு பக்கம் நடிகர் யஷ் படு மாபெறும் வெற்றிபெற்றதை தொடர்ந்து பட வெற்றி விழாவில் படத்தில் தன்னுடன் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டி பேசியுள்ளார்.

USA வசூல்
தமிழகத்தில் ஓரளவிற்கு விஜய் படம் வசூல் வேட்டை நடத்தினாலும் வெளிநாட்டில் சுத்தமாக வசூலிக்கவில்லை. படம் வெளியாகி 14 நாட்கள் தான் ஆகின்றன, அதற்குள் வெளிநாட்டில் விஜய்யின் பீஸ்ட் பட வசூல் அடி பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
அடுத்த நாளே வெளியான KGF 2 செம வசூல் வேட்டை நடத்துகிறது.
நேற்று மட்டும் வெளிநாட்டில் வசூலித்த படங்களின் விவரம் இதோ,
- KGF Chapter2 - $57,300
- Jersey - $12,400
- RRRMovie - $3,600
- பீஸ்ட் - $650
தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ