KGF 2-விடம் மொத்தமாக சுருண்ட பீஸ்ட் ! சென்னையிலே இவ்வளவு தான் வசூலா..
பீஸ்ட் மற்றும் KGF 2
கடந்த தமிழ் சினிமாவையே புரட்டி போடும் அளவு இரண்டு மிக பெரிய திரைப்படங்களான பீஸ்ட் மற்றும் KGF 2 அடுத்தடுத்த நாட்களில் வெளியானது.
இதில் விஜயின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வந்தது, ஆனால் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் KGF 2 பீஸ்ட் படத்தை விட பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்படி தற்போது ஒரு சில திரையரங்கில் KGF 2 படத்தை மெயின் ஸ்கிரீனிலும், பீஸ்ட் படத்தை சிறிய ஸ்கிரீனிலும் ஒட்டி வருகின்றனர்.

சென்னை வசூல் நிலவரம்
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களில் நேற்றைய வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் KGF 2 சென்னையில் மட்டும் ரூ.58 லட்சம் வசூலித்துள்ளது, ஆனால் பீஸ்ட் ரூ.32 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது.
மொத்தமாக சென்னையில் பீஸ்ட் - ரூ 8.35 கோடி, KGF 2 - ரூ 4.19 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் KGF படம் பீஸ்ட் படத்தை ஓவர் டேக் செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

படுதோல்வி அடைந்த பீஸ்ட் திரைப்படம் ! பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ..