இதுவரையில் காணாத வசூல் சரிவை சந்தித்த பீஸ்ட் திரைப்படம் ! அதிர்ச்சி தகவல்..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான விஜய் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் தமிழகம் மட்டுமின்றி பல இடங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பீஸ்ட் படத்துடன் வெளியான KGF 2 திரைப்படம் தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.

சரிவை சந்திக்கும் பீஸ்ட்
இந்நிலையில் தற்போது பீஸ்ட் பட வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திங்கள், செவ்வாய் உள்ளிட்ட தினங்களில் பீஸ்ட் படத்தின் வசூல் A சென்டர்களில் நன்றாக இருந்ததாகவும், ஆனால் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற இடங்களிலும் பீஸ்ட் திரைப்படம் சுத்தமாக வசூல் செய்யவில்லை என தகவல் பரவி வருகிறது.

இந்த ட்ரெஸ் போட்டது ஒரு குத்தமா, சீரியல் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்