தமிழ்நாட்டில் இருந்தே நீக்கப்படும் பீஸ்ட் படத்தை, இங்கு மட்டும் 100 திரையரங்கில் வெளியிடுகிறார்களா !
தோல்வியடைந்த பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பாராத வகையில் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
இதனால் இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டிலே பெரிய அளவில் பாதிக்கப்பட்டது, மேலும் மற்ற இடங்களில் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வி அடைந்ததாக தகவல் வெளியானது.

மீண்டும் ரிலீஸ்
இந்நிலையில் தமிழ்நாட்டிலே பீஸ்ட் திரைப்படம் சரியாக போகவில்லை என்ற காரணத்தால் KGF 2 படத்திற்கு திரையரங்கை கூட்டி வந்தனர்.
ஆனால் தற்போது பீஸ்ட் படத்தை 100 திரையரங்கில் வெளியிடவுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆம், பீஸ்ட் திரைப்படத்தை நேபால் நாட்டில் 100 திரையரங்கில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
இது குறித்த தகவல் தான் தற்போது விஜய் ரசிகர்களிடையே பரவி வருகிறது.

விபத்தில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள், வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள்- இதோ