பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த கதை இது தானா ! இணையத்தில் வைரலான புகைப்படம்...
எதிர்பார்ப்பில் பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி 24 மணிநேரத்தில் 30+ மில்லியன் பார்வைகளை யூடியூபில் குவித்துள்ளது.
ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பீஸ்ட், சமீபத்தில் வெளியான ட்ரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படத்தின் Synposis குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
படத்தின் கதை இது தானா !
அதில் "நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் RAW Agent அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர்.
அந்த முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத் தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செய்லபட்டு பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துகட்டுகிறார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு விஜய் டிவி செய்ததை விமர்சிக்கும் ரசிகர்கள் !