பீஸ்ட் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா.. வெறித்தனமான அப்டேட்
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட்.
பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும், படத்தை விட விஜய்யின் ரசிகர்கள் வெறித்தமாக காத்திருக்கும் பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைலர் ரிலீஸ்
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்து, வெறித்தனமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் முதல் வாரம் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்