பீஸ்ட் தான் No.1 திரைப்படமாக இருக்கப்போகிறது ! முக்கிய சினிமா பிரமுகர் கணிப்பு..
முதல் நாள் வசூல் சாதனை
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம், இப்போதே முன்பதிவில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
மேலும் தளபதி விஜயின் திரைப்படம் என்பதால் பீஸ்ட் படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அதன்படி தற்போது பீஸ்ட் படத்தின் முதல் நாள் தமிழ்நாடு காலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் ரூ.40 கோடி ரூபாயை வசூலிக்கும் என முக்கிய சினிமா பிரமுகர் கனித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் சர்கார் திரைப்படம் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

இலவச பொருட்களை கொடுத்து விற்கப்படும் பீஸ்ட் டிக்கெட்ஸ் ! ரசிகர்களின் அலப்பறை..