அஜித், சூர்யா படங்களின் வசூலை அசால்ட்டாக தட்டிதூக்கிய விஜய்யின் பீஸ்ட்.. வெறித்தனமான புக்கிங்
பீஸ்ட் புக்கிங்
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது.
இப்படத்திற்காக புக்கிங் சமீபத்தில் துவங்கியது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக புக்கிங் செய்து வருகிறார்கள்.

வசூல் சாதனை
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் கேரளா புக்கிங்கில் முதல் நாள் மட்டுமே ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை மற்றும் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் இரு படங்களும் முழுமையாக ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.

ஆனால், விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அந்த முழு வசூலையும் புக்கிங்கில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.