பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்த AK 62 பட இயக்குனர் ! புகைப்படத்துடன் இதோ..
பீஸ்ட் அப்டேட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடல் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் அனைவரும் நேற்று பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை தான் எதிர்பார்த்தனர், ஆனால் அது நடக்கவில்லை.
விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்
இதற்கிடையே தற்போது பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் பீஸ்ட் படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள படங்களை தேதியுடன் பதிவிட்டுள்ளார். அதில் பீஸ்ட் 13 ஆம் தேதி என்றும் அவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 28 ஆம் தேதி என்றும் உள்ளது.
இதனால் தற்போது ரசிகர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனே பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.
எதற்கும் துணிந்தவன் கதாநாயகிக்கு நடிகர் சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் ! என்ன தெரியுமா?

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu
