வலிமை வசூலை முன்பதிவிலேயே மிஞ்சிய விஜய்யின் பீஸ்ட்! வெறித்தனமான புக்கிங்
பீஸ்ட் படத்தின் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து இருக்கிறது.
முன்பதிவு
படத்தை முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என முனைப்பு காட்டி வரும் விஜய் ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இரண்டாம் நாள் அரசு விடுமுறை என்பதால் அந்த நாளில் குடும்ப ரசிகர்களும் அதிகம் படம் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமையை ஓவர்டேக் செய்தது
அமெரிக்காவில் பீஸ்ட் படத்திற்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது ரிசர்வேஷன் மூலம் வந்த வசூல் 2 லட்சம் டாலர்களை விட அதிகம் என தகவல் வந்திருக்கிறது.
வலிமை படம் ப்ரீமியர் மற்றும் அடுத்த நாள் வசூல் மொத்தமாக சேர்ந்து 1.78 லட்சம் டாலர்கள் மட்டுமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போகிற போக்கை பார்த்தால் அங்கு வலிமை படத்தின் மொத்த வசூலான நான்கு லட்சம் டாலர்களை பீஸ்ட் முதல் நாளிலேயே முறியடித்துவிடும் என தெரிகிறது.
பீஸ்ட் படத்தை முதலில் பார்த்தது இவர்தான்.. விஜய்க்கு கூட காட்டாத நெல்சன்