பீஸ்ட் படத்தின் ட்ரைலர் லீக்கானதா ! அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..
பீஸ்ட் ட்ரைலர் லீக்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கிடையே இப்படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, பீஸ்ட் படத்தின் ட்ரைலர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
மேலும் தற்போது செம மாஸ் ஆக்ஷன் போஸ்டருடன் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இணையத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் லீக்கானது போல் ஒரு வீடியோ பரவி வருகிறது. ஆம், அந்த வீடியோ வேறு ஒன்றும் இல்லை பைரவா மற்றும் குர்கா பட காட்சிகளை வைத்து எடிட் செய்துள்ளனர்.
அந்த வீடியோவை பீஸ்ட் ட்ரைலர் போல இணையத்தில் பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய தேவையில்லை. பீஸ்ட் ட்ரைலர் சொன்னது போல நாளை 6 மணிக்கு தான் வெளியாகிறது.

முக்கிய இயக்குனரின் படத்தில் கமல் நடிக்கவில்லையாம் ! அவருக்கு பதிலாக யார் நடிக்கிறார் தெரியுமா?