பீஸ்ட் என்னதான் இங்கு சொதப்பினாலும் வெளிநாட்டில் இவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ளதா!
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
கடந்த 13 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியான பீஸ்ட் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது.
மேலும் பீஸ்ட் திரைப்படம் மற்ற இடங்களில் வசூலில் சொதப்பினாலும் தமிழ் நாட்டில் இதுவரை இருந்த சாதனைகளையும் முறியடித்து No.1 திரைப்படமாக மாறியுள்ளது.
புதிய சாதனை படைத்த பீஸ்ட்
இந்நிலையில் தற்போது விஜய்க்கு உள்ள பெரிய வெளிநாட்டு மார்க்கெட்களில் ஒன்று USA, தற்போது அங்கு பீஸ்ட் திரைப்படம் 1 மில்லியன் வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் அங்கு 1 மில்லியன் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
பீஸ்ட் படத்தின் மூன்று நாள் தமிழ்நாடு காலெக்ஷன் ! கடும் சரிவை சந்தித்த விஜய்..