விமர்சனங்களை தாண்டியும் No.1 இடத்திற்கு வந்த விஜய் பீஸ்ட் திரைப்படம் !
USA-வில் பீஸ்ட் தான் No.1
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் பீஸ்ட்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
அதனாலே இப்படத்தின் ஓப்பனிங் தமிழ்நாடு முழுவதும் பெரியளவில் இருந்தது, ஆனால் பீஸ்ட் அனைவரிடமும் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் தற்போது பீஸ்ட் படத்தின் வசூல் பல இடத்திலும் பெரிய சரிவை சந்தித்துள்ளது, வரும் நாட்களில் தான் தெரியும் பீஸ்ட் படம் வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்று.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் USA பாக்ஸ் ஆபீஸில் $1.186M வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை USA-வில் வெளியான தமிழ் திரைப்படங்களில் பீஸ்ட் தான் No.1 இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்! இப்படியா சொன்னார்