பீஸ்ட் நெகடிவ் விமர்சனம் பார்த்துவிட்டு நெல்சனுக்கு போன் செய்த விஜய்! இப்படியா சொன்னார்
விஜய் படம் என்றாலே எப்போதும் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அதுவும் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் இயக்கிய நெல்சன் உடன் விஜய் கூட்டணி சேரும் படம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் தான் கிடைத்திருக்கிறது. படத்தில் பல காட்சிகளில் சுத்தமாக லாஜிக் இல்லை என ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
நெல்சனுக்கு ஆறுதல் சொன்ன விஜய்
இந்நிலையில் தற்போது விஜய் நெல்சனுக்கு கால் செய்து ஆறுதல் கூறி இருக்கிறாராம். விமர்சனங்களை மனதில் வைத்து கொள்ளாதீர்கள், நாம் மீண்டும் ஒரு படம் இணைந்து செய்யலாம் என கூறினாராம் விஜய்.
ஒரு படம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படம் எடுத்து ஹிட் கொடுப்பது அஜித் பார்முலா. விவேகம் தோல்விக்கு பிறகு விஸ்வாசம் எடுத்து ஹிட் ஆனது. அதே பார்முலாவை தான் விஜய்யும் தற்போது பின்பற்றுகிறார்.
பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்!