ஏ.ஆர். முருகதாஸின் சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதன்பின் விஜயகாந்த், சூர்யா, அமீர் கான், விஜய், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
மேலும் தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ள ஏ.ஆர். முருகதாஸ் எஸ்.கே. 23 படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடந்தது. பூஜை நடந்த மறுநாளில் இருந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கிவிட்டது.
சிறந்த திரைப்படங்கள்
இந்நிலையில், இந்தியளவில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
1. துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் முதல் முறையாக கூட்டணி அமைத்தது இப்படத்திற்காக தான். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய்க்கு அவருடைய திரை வாழ்க்கையில் கம் பேக் திரைப்படமாகவும் அமைந்தது.
2. தீனா
இன்று இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை ஏ.ஆர். முருகதாஸ் பிடித்துள்ளார் என்றால், அதற்கான ஆரம்பப்புள்ளி தீனா திரைப்படம் தான். அஜித் - சுரேஷ் கோபி நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. முதல் படமே ஏ.ஆர். முருகதாஸுக்கு திரை வட்டாரத்தில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
3. ரமணா
விஜயகாந்த் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ரமணா. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சிம்ரன், விஜயன், யுகி சேது, அஷிமா பாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நாட்டில் உள்ள ஊழல் குறித்து பேசிய இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.
4. கஜினி
சூர்யா - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான சிறப்பான தரமான திரைப்படம் கஜினி. மாறுபட்ட கதைக்களத்தில் உருவான இப்படம் சூர்யாவின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய மயில்கல்லாக அமைந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா, பிரதீப் ராம் சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
5. 7ஆம் அறிவு
தமிழ் சினிமாவில் வெளிவந்த Sci-fi ஆக்ஷன் திரைப்படங்களில் அட்டகாசமான ஒன்று 7ஆம் அறிவு. போதிதர்மரை வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கி சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். மேலும் ஸ்ருதி ஹாசன், Johnny Tri Nguyen, முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
6. கத்தி
ஏ.ஆர். முருகதாஸ் என கூறினால் உடனடியாக நினைவிற்கு வரும் திரைப்படங்களில் ஒன்று கத்தி. துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்த முருகதாஸ். இப்படமும் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி விஜய்யின் திரை வாழ்க்கையில் டாப் 10 திரைப்படங்கள் என்று எடுத்தால், அதில் கண்டிப்பாக கத்தியும் இடம்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.