சிறந்த அட்வென்ச்சர் தமிழ் திரைப்படங்கள் - ஒரு சிறப்பு பார்வை
திரையுலகில் அனைவராலும் ரசிக்கப்படும் Genre-களில் ஒன்று அட்வென்ச்சர். ஹாலிவுட்டில் வெளிவந்த பல அட்வென்ச்சர் திரைப்படங்களை நாம் கண்டு ரசித்திருக்கிறோம். இந்நிலையில், நம் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அட்வென்ச்சர் திரைப்படங்கள் குறித்து பார்க்கவிற்கும் ஒரு சிறப்பு தொகுத்து தான் இந்த கட்டுரை.
டிக் டிக் டிக்
ஷக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் முதல் முறையாக இந்தியளவில் வெளிவந்த ஸ்பேஸ் திரைப்படம் டிக் டிக் டிக். ஒரு புறம் அப்பா மகன் பாசம், மறுபுறம் நாட்டை காப்பாற்ற ஸ்பேஸில் போராட்டம் என செம அட்வென்ச்சராக இப்படத்தை கையாண்டு இருப்பார் இயக்குனர் ஷக்தி சௌந்தராஜன். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்ற படங்களில் இதுவும் ஒன்றாகும்.
தும்பா
ஹரிஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், KPY தீனா, பாலா உள்ளிட்ட பலரும் நடித்து வெளிவந்த திரைப்படம் தும்பா. காட்டுகள் இருக்கும் அழகிய விஷயங்களையும், தவறான விஷயங்களையும் அழகாக குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் எடுத்துக்காட்டிய திரைப்படம் தும்பா. நகைச்சுவை, செண்டிமெண்ட், மிருகங்களின் காட்சி அமைப்பு என அனைத்தும் அட்வென்ச்சராக, குழந்தைகளை கவரும் வண்ணம் இருந்தது.
ஆயிரத்தில் ஒருவன்
செல்வராகவனின் தி பெஸ்ட் இயக்கத்தில் ஒன்று அயிரத்தில் ஒருவன். ஏன், தமிழ் சினிமாவிலேயே வெளிவந்த தி பெஸ்ட் மேக்கிங் படங்களில் இதுவும் ஒன்றாகவும். அந்த அளவிற்கு தனது இயக்கத்தின் மூலம் சிறந்த அட்வென்ச்சர் படத்தை கொடுத்திருந்தார் செல்வராகவன். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும், தற்போது ரசிகர்கள் ஒவ்வொருவரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், அழகம் பெருமாள், பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மரகத நாணயம்
நகைச்சுவை கலந்த சிறந்த அட்வென்ச்சர் படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், டேனியல், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். மரகத நாணயத்தை அடைய போராடும் ஹீரோ மற்றும் வில்லன் ஒரு புறம். மரகத நாணயத்தை தொட்டால் கொன்று விடுவேன் என்று இருக்கும் ராஜாவின் ஆவி மறுபுறம், என்பது தான் இப்படத்தின் கதை. இதனை நகைச்சவை கலந்த அட்வென்ச்சராக அருமையாக கையாண்டு இருப்பார் இயக்குனர் சரவணன்.
இரண்டாம் உலகம்
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இரண்டாம் உலகம். வித்தியாசமான கதைக்களத்தில் காதலை இனைத்து, படம் பார்ப்பவர்களை தனி உலகத்திற்கு கொண்டு சென்றது இரண்டாம் உலகம். இப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. ஆனால், சினிமாவை நேசித்து படத்தை இயக்கும் செல்வராகவனின் படைப்பு இன்று இல்லையென்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் அனைவராலும் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வனமகன்
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் வனமகன். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து சாயீஷா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். நகரத்தில் வாழ்பவர்களுக்கு மட்டும் தான் குடும்பங்கள் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். காடுகளில் வாழும் மிருகங்களுக்கும், காட்டுவாசிகளுக்கும் கூட குடும்பங்கள் இருக்கிறது. இந்த காடு தான் அவர்களின் விடு, என நமக்கு அழகாக தனது இயக்கத்தில் அட்வென்ச்சர் கலந்த உணர்வுபூர்வமான படமாக எடுத்து காட்டியிருந்தார் விஜய்.
கர்ப்பமாக இருக்கும் நடிகை நமீதா, ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்