அட்லீ இயக்கிய சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை
அட்லீ
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் இயக்குனர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்த அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படமே மாபெரும் வெற்றியடைந்தது. மிகப்பெரிய வெற்றி கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இவர் மீது வைக்கப்பட்டது. படம் காப்பி, வேறொரு படத்தை பார்த்து அப்படியே காப்பியடித்துவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள்.
அவர்கள் அனைவருக்கும் தனது தொடர் வெற்றிகளின் மூலம் பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கிறார் அட்லீ. ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்தார். தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை கொடுத்தார்.
விஜய்யை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். 4 ஆண்டு இப்படத்திற்கு உழைத்தார். அதற்கான பலனாக அப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த திரைப்படங்கள்
இந்நிலையில், அட்லீ இயக்கிய சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். இதுவரை அவர் 5 திரைப்படங்கள் இயக்கியுள்ள நிலையில், இதில் டாப் 3 படங்கள் என்னவென்று பார்க்கலாம்.
[]
1. ராஜா ராணி
அட்லீயின் அறிமுக திரைப்படமான ராஜா ராணியில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், சத்யராஜ் மற்றும் நஸ்ரியா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ஜி.வி. பிரகாஷின் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
2. மெர்சல்
விஜய்யுடன் இரண்டாவது முறையாக அட்லீ கூட்டணி அமைத்த திரைப்படம் மெர்சல். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டியிருப்பார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, காஜல், நித்யாமேனன் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருப்பார்.
3. ஜவான்
பாலிவுட் திரையுலகில் தமிழ் சினிமாவில் இருந்து சென்று தடம் பதித்தார் அட்லீ. முதல் பாலிவுட் படத்திலேயே வசூல் சாதனை படைத்தார். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் அசத்திருந்த இப்படத்தில் நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.