'என் இனிய தமிழ் மக்களே' பாரதிராஜா இயக்கிய சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை
'என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்'
பாரதிராஜா
தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. 1977ல் தனது திரை பயணத்தை ஆரம்பித்த இவர், காதலை பல கோணங்களில் நமக்கு காட்டினார். இந்நிலையில், பாரதிராஜா இயக்கிய சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்..
சிறந்த படங்கள்
முதல் மரியாதை
1985ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் முதல் முறையாக சிவாஜி நடித்து வெளிவந்த திரைப்படம் முதல் மரியாதை. இப்படத்தில் சிவாஜியுடன் இணைந்து வடிவுக்கரசி, ராதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
16 வயதினிலே
ரஜினிகாந்த், கமல், ஸ்ரீதேவி மற்றும் காந்திமதி இணைந்து நடிக்க 1977ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படம் தான் பாரதிராஜாவின் அறிமுக திரைப்படமாகும். இன்று வரை தமிழ் சினிமாவில் இருந்து அழிக்க முடியாத ஓர் இடத்தை இப்படம் பிடித்துள்ளது.
கிழக்கே போகும் ரயில்
இன்று திரையுலகில் மூத்த நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார் அறிமுகமான திரைப்படம் கிழக்கே போகும் ரயில். 1978ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ராதிகாவுடன் சுதாகர், காந்திமதி, கவுண்டமணி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.
சிகப்பு ரோஜாக்கள்
கமல்ஹாசனின் வில்லன் நடிப்பில் வெளிவந்த வெறித்தனமான திரைப்படங்களில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள். சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களுக்கு தமிழில் பிள்ளையார் சுழி போட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 1978ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
அலைகள் ஓய்வதில்லை
கார்த்திக் மற்றும் ராதா ஆகிய இரு பெரிய நட்சத்திரங்கள் அறிமுகமான திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை. மணிவண்ணன் கதையில், இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். 1981ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் டாப் காதல் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.
வேதம் புதிது
சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று வேதம் புதிது. இப்படம் Best Film on Other Social Issues என்ற பிரிவில் தேசிய விருதையும் வென்றது. பாரதிராஜா இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சத்யராஜ், அமலா, ராஜா, சரிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு சீமையிலே
அண்ணன், தங்கை பாசத்தில் உருவாகி தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும் கிழக்கு சீமையிலே. 1993ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ராதிகா, விஜயகுமார், நெப்போலியன் இணைந்து நடித்திருந்தனர்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
