இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள பிரபலமான நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போது அறிமுக பிரபலம் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இவர் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரத்தின் மகன் ஆவார். தனது தாத்தா மற்றும் தந்தையை போலவே தற்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார். இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள இவருடைய முதல் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவர் தான் அந்த பிரபலம்
அவர் வேறு யாருமில்லை தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான். ஆம், விஜய் - சங்கீதா தம்பதிக்கு பிறந்த மூத்த மகன் சஞ்சயின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

சஞ்சய் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது அறிமுக படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சீவி நகர், Y Junction, மாருதி நகர் — 16 ஆண்டுகளாக நீடித்த போக்குவரத்து ஒழுங்கின்மைகளுக்கு தீர்வு! IBC Tamilnadu
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri