தமிழ் சினிமாவின் சிறந்த Cult Classic படங்கள்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தற்போதும் பேசப்படும் சிறந்த Cult classic படங்களை பற்றி பார்க்கலாம்.
அன்பே சிவம்
சுந்தர் சி இயக்கத்தில் கமல், மாதவன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த படம் அன்பே சிவம்.
ஒரு பேரிடர் நேரத்தில் ஒடிசாவில் சந்தித்துக்கொள்ளும் கமல் - மாதவன். சென்னை திரும்ப முடியாமல் தவிக்கும் பயணத்தில் அவர்களுக்குள் நடக்கும் விவாதம் தான் இந்த படம்.
அன்பே சிவம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனபோது பெரிதாக வரவேற்பு இல்லை, பெரிய தோல்வி தான். ஆனால் தற்போது அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
புதுப்பேட்டை
தனுஷ் நடிப்பில் 2006ல் வெளிவந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார். படம் வெற்றி/தோல்வி என்பதை தான் தற்போதும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இது இருந்து வருகிறது.
புதுப்பேட்டை 2 எப்போது எடுப்பீங்க என்பது தான் செல்வராகவனை பார்த்து ரசிகர்கள் நீண்டகாலமாக கேட்டு வருகிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படத்தின் மூலம் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் தனுஷ். அதற்கு முன் அவரது தோற்றத்தை பற்றி அதிகம் விமர்சனங்கள் மற்றும் ஏளன பேச்சுகள் வந்துகொண்டிருந்தது.
ஆரண்ய காண்டம்
ரசிகர்களால் தற்போதும் பேசப்படும் கேங்ஸ்டர் படம். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 2011ல் ரிலீஸ் ஆன படம் இது.
ரிலீஸின்போது இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆளவந்தான்
கமல் இரண்டு வித்தியாசமான ரோல்களில் நடித்து 2001ல் ரிலீஸ் ஆன படம் ஆளவந்தான்.
இந்த படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறாமல், வசூலில் சொதப்பி பிளாப் ஆனது.
ஆனால் தற்போது இந்த படத்தை கமல் ரசிகர்கள் கல்ட் க்ளாஸிக் படமாக கொண்டாடுகிறார்கள்.