தேனிசை தென்றல் தேவா இசையில் வந்த சிறந்த பாடல்கள்- ஓர் பார்வை
தேனிசை தென்றல் தேவா ஒரு காலத்தில் இசைஞானி இளையராஜாவையும், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானையும் கலந்த கலவையாக இருந்தவர்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வந்தார்.
400 படங்களுக்கு மேல் இசையமைத்து மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தேவா அவர்கள் கானா பாடல்களுக்கு பெயர் போனவர்.
1990ம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்காக மாநில விருது பெற்றார், அதன்பிறகு கலைமாமணி (1992), பிலிம்பேர் விருதுகளை வென்றிருக்கிறார்.
அதாண்டா இதாண்டா
அருணாச்சலம் படத்தில் ரஜினியின் அறிமுக பாடலாக அமைந்த ஒரு பாடல். வைரமுத்து வரிகளில் உருவான பாடல் எஸ்.பி.பி தேவாவின் இசைக்கு உயிர் கொடுத்து பாட படு ஹிட்டான ஒரு பாடல்.
நான் ஆட்டோக்காரன்
பாட்ஷா படத்தில் ரஜினி இடம்பெற தேவா இசையில் வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி பாடிய பாடல். ஆட்டோ ஓட்டுபவர்களை கௌரவித்து எத்தனையோ பாடல்கள் வந்துவிட்டது, ஆனால் இந்த பாடலை அடித்துக்கொள்ள எந்த பாடலுமே இல்லை.
ஆயுதபூஜை அப்போது இந்த பாடல் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்ட் கிடையவே கிடையாது.
வண்ண நிலவே
நினைத்தேன் வந்தாய் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் இது செம ஹிட்டடித்த பாடல். விஜய் மற்றும் ரம்பா இடம்பெற அமைந்த இந்த பாடலை பழநி பாரதி எழுத ஹரிஹரன் பாடியுள்ளார். இந்த படத்திலேயே என்னவளே என்னவளே என்ற பாடலும் நல்ல ஹிட்டடித்த பாடல் தான்.
ஏப்ரல் மாதத்தில்
அஜித்-சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம்பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். உன்னி கிருஷ்ணன்-ஹரினி இணைந்து தேவா இசையில் பாடிய இப்பாடலை வைரமுத்து தான் எழுதியுள்ளார். அதேபோல் ஓ சோனா என்ற பாடலும் இந்த படத்தில் பெரிய ஹிட்டடித்தது.
நலம் நலமறிய ஆவல்
பார்க்காமல் காதல் என இருக்கும் இருவருக்கும் அமைந்த அழகிய மெலோடி பாடல். எஸ்.பிபி, அனுராதா ஸ்ரீராம் இணைந்து பாடிய இப்பாடலை அகத்தியன் தான் எழுதியுள்ளார்.
மீனம்மா
ஆசை படத்தில் வந்து நல்ல மெலோடி பாடல். அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன் பாடிய பாடல். வாலி எழுதிய இந்த பாடலில் அஜித் மற்றும் சுவலட்சுமி இடம்பெற்றுள்ளனர்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பட பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா?- அப்போ அல்லு அர்ஜுன் சம்பளம் இவ்வளவா?