தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் சிறந்த படங்கள்- ஒரு பார்வை
தமிழ்நாடு என்றாலே குடும்பம், கலாச்சாரம் என பல விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது உள்ளவர்கள் குடும்பம் என்றால் என்ன என்பதையே மறந்து வருகின்றனர்.
அவர்களுக்கு நினைவு கூறும் வகையில் அவ்வப்போது தமிழ் சினிமாவில் குடும்பமாக பார்க்கும் குடும்ப படங்கள் வருகின்றன.
அப்படி சமீபத்தில் தமிழக மக்கள் குடும்பமாக திரைக்கு வந்து கொண்டாடிய குடும்ப படம் என்றால் அது அஜித்தின் விஸ்வாசம் தான்.
சரி இந்த படத்தை போல குடும்பத்தை மையமாக வைத்து வந்த சிறந்த படங்களின் தொகுப்பை காணலாம்.
விஸ்வாசம் (2019)
கதை என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்கு அத்துப்படி. குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கிற்கு வந்து இந்த படத்தை பார்த்தார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பமாக திரையரங்கிற்கு வந்து மக்கள் பார்ப்பது இந்த படம் தான் என எல்லோரும் பாராட்டினர்.
குடும்பம் என்றால் 4 பேர் கொண்ட கதை என்று இல்லாமல் மாமன், மச்சான், பங்காலி, அப்பாத்தா என கிராமங்களில் எப்படி உறவுகளோடு இருப்பார்களோ அப்படியே இருக்கும் கதை.
படம் ரூ. 200 கோடியை எட்டி சாதனை செய்திருந்தது. இதேபோல் படங்கள் நிறைய வரலாம் என மக்களே ஆசைப்பட்டார்கள்.
கடைக்குட்டி சிங்கம் (2018)
இதுவும் பக்கா குடும்ப கதை. ஒரு கொண்டாட்டம் என்று வந்துவிட்டார் ஊர் சொந்தமே கூடி கொண்டாடுகிறார்கள். அதற்கு படத்தில் வரும் காது குத்தும் விழா உதாரணம்.
சொந்தபந்தங்களுடன் சர்ச்சரவின்றி வாழ நினைக்கும் குடும்பத்தில் மற்றவர்களால் ஏற்படும் பிரச்சனை சமாளித்து காதலித்த பெண்ணை திருமணம் செய்வது என்பது படத்தின் கரு. இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் சூப்பரான படம் என்று கூறலாம்.
சூர்யவம்சம் (1997)
சரத்குமார் இரு வேடங்களில் நடித்த திரைப்படம். சுவாரஸ்யமான நல்ல கருவை கொண்டு படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் எத்தனை முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் குடும்பங்கள் உட்கார்ந்து பார்க்கும் திரைப்படமாக இது இருக்கிறது.
படம் ரிலீஸ் ஆன வருடத்தின் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ரீமேக் ஆனது.
சமுத்திரம் (2001)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2001ம் ஆண்டு சரத்குமார், முரளி, மனோஜ், கவுண்டமணி, காவேரி என பலர் நடித்தனர். சகோதரிக்காக அண்ணன்கள் காட்டும் பாசத்தை இப்படம் உணர்த்தும்.
100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த இப்படம் தெலுங்கில் சிவ ராம ராஜு என்ற பெயரிலும், பொங்காலியில் கர்டப்யா என்றும், கன்னடத்தில் பரமசிவா என்றும் ரீமேக் ஆனது.
ஆனந்தம் ( 2001)
லிங்குசாமி இயக்கத்தில் மம்முட்டி, முரளி, அப்பாஸ், சினேகா என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க வெளியான குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படம்.
அதிகம் வசூலித்த படமாக இப்படம் 2001ம் ஆண்டு அமைந்தது, தமிழில் கிடைத்த வரவேற்பு இப்படம் தெலுங்கில் 2005ம் ஆண்டு சங்ரான்தி என்ற பெயரில் வெளியானது.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் தாக்கமே பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் உருவாக காரணம் என கூறப்படுகிறது.
சிறந்த படங்கள் என்று 5 படங்கள் மட்டுமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, இது தவிர குடும்ப படங்கள் எத்தனையே இருக்கிறதே அதை போடலாமா என நீங்கள் யோசிக்கலாம்.
நாங்கள் இங்கே பதிவு செய்தது மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட தொலைக்காட்சிகளில் அதிகம் திரையிடப்பட்ட படங்களே.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகாவின் சீமந்த நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்