மனதை வருடிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சிறந்த பாடல்கள்
ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் உறவினர் என்ற அடையாளம் இருந்தாலும் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றவர்.
இசையமைப்பாளராக பலரது நெஞ்சங்களை இசையின் மூலம் மூழ்கடித்த ஜிவி நடிகராக, பாடகராக, டப்பிங் கொடுப்பவராகவும் சினிமாவில் வலம் வருகிறார்.
இவர் இசையமைப்பில் வந்த பாடல்கள் பல படு சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்டில் அமைந்துள்ளது.
அப்படி நல்ல ஹிட்டான ஜிவி பிரகாஷின் சில பாடல்களை காண்போம்.
வெயிலோடு விளையாடி
2006ம் ஆண்டு வெயில் என்ற படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.
அக்கம் பக்கம், உன் விழியில்
அஜித் திரைப்பயணத்தில் அமைந்த ஹிட் பாடல்களில் ஒன்று கிரீடம் படத்தில் இடம்பெற்ற அக்கம் பக்கம். 2007ம் ஆண்டு இப்பாடல் செம ஹிட், அதேபோல் உன் விழியில் பாடலும் அதிக கேட்கப்பட்டது.
கனா காண்கிறேன்
ஆனந்த தாண்டவம் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் செம கிளாசிக்கல் பாடலாக அமைந்தது.
உன் பெயரை சொல்லும்
வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ் மற்றும் அஞ்சலி நடிப்பில் 2009ம் வெளியான திரைப்படம் அங்காடி தெரு. இதில் இடம்பெற்ற அவள் அப்படி ஒன்றும் அழகில்லை மற்றும் உன் பேரை சொல்லும் போதே பாடல்கள் ஹிட்டானது.
பூக்கள் பூக்கும் தருணம்
மதராசப்பட்டினம், ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடித்த அழகிய திரைப்படம். இதில் வந்த பூக்கள் பூக்கும் தருணம் பாடல் யூடியூபில் 77 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்து வருகிறது.
ஆரிரோ
ஆரிரோ ஆராரிரோ இது தமிழ் மக்கள் அனைவருமே கொண்டாடிய கொண்டாடப்பட்ட கொண்டாடப்படும் ஒரு பாடல். தெய்வ திருமகள் படத்தில் அப்பா-மகள் பாசத்தை தருணங்களை அழகாக வர்ணித்த ஒரு பாடல்.
சியான் விக்ரம் மற்றும் சாராவின் நடிப்பு பாடலில் அற்புதமாக இருக்கும். ஹரிசரன் பாடிய இப்பாடல் பலரது காலர் டியூனாக இருந்தது.
சில்லென ஒரு மழைதுளி
2013ம் ஆண்டு ஆர்யா-நஸ்ரியா, ஜெய்-நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கிய ஒரு திரைப்படம். இதில் வந்த சில்லென ஒரு மழைதுளி பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய பாடலாக உள்ளது.
[
கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழும் நடிகை அமலாபாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
