கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை

By Yathrika Jul 12, 2022 11:50 AM GMT
Report

ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் 2012ம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா என்ற ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் மக்களால் அறியப்பட்டார்.

அப்பாடல் அவருக்கு கொடுத்த மிகப்பெரிய ஹிட் 2013ம் ஆண்டில் இருந்து படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார், பாடகராகவும் கலக்கி வந்தார். இதுவரை 20 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஹிப்ஹாப் ஆதியின் சிறந்த பாடல்கள் லிஸ்டை பார்ப்போம்.

மீசைய முறுக்கு (2017)

ஆதியே படத்தை இயக்கி, நடித்து படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். இதில் வந்த வாடி புள்ள வாடி, மீசைய முறுக்கு பாடல்கள் மக்களிடம் நல்ல ஹிட்டடித்தது.

கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை | Best Hiphop Tamizha Songs In Tamil

தனி ஒருவன் (2017)

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என பலர் நடிக்க செம ஹிட்டடித்த படம் தனி ஒருவன். இதில் இடம்பெற்ற காதல் கிரிக்கெட் செம ஹிட், ஆதி வரிகளை எழுதிய இப்பாடலை கரேஷ்மா ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.

அதேபோல் தீமை தான் வெல்லும், கண்ணால கண்ணால என்ற பாடலும் செம ஹிட்.

கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை | Best Hiphop Tamizha Songs In Tamil

மிஸ்டர் லோக்கல் (2019)

மிஸ்டர் லோக்கல் படத்தில் இடம்பெற்ற இந்த டக்குனு டக்குனு பாடல் வரிகளை மிர்ச்சி விஜய் எழுத ஆதி இசையமைக்க அனிருத் பாடியுள்ளார்.

கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை | Best Hiphop Tamizha Songs In Tamil

இன்று நேற்று நாளை (2015)

விஷ்ணு மற்றும் மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியானஇன்று நேற்று நாளை படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடல் செம ஹிட்.

கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை | Best Hiphop Tamizha Songs In Tamil

ஆம்பள (2015)

விஷால்-ஹன்சிகா நடிப்பில் வெளியான இப்படத்தில் பழகிக்கலாம் என்ற பாடல் நல்ல ஹிட்.

கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை | Best Hiphop Tamizha Songs In Tamil

இமைக்கா நொடிகள் (2018)

நீயும் நானும் அன்பே இந்த பாடலை ரசிக்காத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.  விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இடம்பெற்ற இப்பாடல் பல தம்பதியரின் பேவரெட் பாடலாக அமைந்துள்ளது. 

கெத்தாக மீசைய முறுக்க சொன்ன இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் ஹிட் பாடல்கள்- ஓர் பார்வை | Best Hiphop Tamizha Songs In Tamil

ஹிப்ஹாப் ஆதி படங்களில் இசையமைப்பதை தாண்டி தனியாக பாடல்கள் அதிகம் வெளியிட்டுள்ளார். கிளப் மேல மப்பு லே, வாடி புள்ள வாடி, போடா, டக்கரு டக்கரு, கோவை கெத்து என ஹிப்ஹாப் ஆதி தனியாக வெளியிட்ட பாடல்கள் தான் ரசிகர்களிடம் அதிக ரீச் பெற்றுள்ளன.

கணவரை இழந்த மீனாவிற்கு இன்று திருமண நாள்- கடந்த வருடம் அவர் போட்ட பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US