மணி ரத்னம் இயக்கிய சிறந்த திரைப்படங்கள்.. ஓர் சிறப்பு பார்வை
மணி ரத்னம்
இந்திய சினிமாவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணி ரத்னம். 1983ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை துவங்கிய இவர், இன்று வரை ஆகச்சிறந்த பல திரைப்படங்களை நமக்கு கொடுத்துள்ளார். அப்படி இவர் இயக்கிய சிறந்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சிறந்த திரைப்படங்கள்
இருவர்
எம்.ஜி.ஆர் - கருணாநிதி எனும் மாபெரும் சகாப்தங்களை வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் இருவர். மணி ரத்னம் இயக்கிய இப்படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், தபு, ஐஸ்வர்யா ராய், ரேவதி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 1997ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
மௌன ராகம்
காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் மோகன், ரேவதி மற்றும் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த இயக்குனர் என்ற பிரிவில் பிலிம்ஃபேர் விருதை வென்றார் மணி ரத்னம்.
இந்த புகைப்படத்தில் முருகன் போல் இருக்கும் இந்த நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
நாயகன்
உலகநாயகன் கமல் ஹாசனுடன் மணி ரத்னம் முதல் முறையாக கூட்டணி அமைத்த திரைப்படம் நாயகன். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் கமலுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தளபதி
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கூட்டணி மணி ரத்னம் - ரஜினி. இந்த கம்போ 1991ஆம் ஆண்டு தளபதி படத்தில் நிறைவேறியது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட். மேலும் ரஜினி - மம்மூட்டி கூட்டணி படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.
பாம்பே
1995ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி மற்றும் மனிஷா கொய்ராலா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பாம்பே. முக்கிய அரசியலை பேசிய இப்படம் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
உயிரே
காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ஹிந்தியில் தில் சே என்ற தலைப்பிலும், தமிழில் உயிரே என்ற தலைப்பிலும் வெளிவந்தது. ஷாருக்கான் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான முதல் படமும் இதுவே ஆகும்.
ரோஜா
இப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசைப்புயல் வீச துவங்கியது. ஆம். ஏ.ஆர். ரஹ்மானை ரோஜா படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் மணி ரத்னம். இப்படத்தின் வெற்றிக்கு மணி ரத்னத்தின் கதையும், திரைக்கதையும், நடிகர், நடிகைகளின் நடிப்பு எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு முக்கியமான ஒன்று ஏ.ஆர். ரஹ்மானின் இசை. இன்று வரை நம் நினைவில் இருந்து நீங்கா இடத்தை ரோஜா படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் பிடித்துள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டாள்
தன்னை ஈன்றெடுத்த தாய்யை தேடும் சிறு பெண்ணின் தவிப்பை திரைக்கதையாக உருவாக்கி மணி ரத்னம் எடுத்த திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் மாதவன், சிம்ரன், பசுபதி, நந்திதா தாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.
அலைபாயுதே
90ஸ் கிட்ஸ் மனதை கவர்ந்த காதல் காவிய திரைப்படங்களில் ஒன்று அலைபாயுதே. மாதவன் - ஷாலினி இணைந்து நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் மக்கள் மனதை தொட ரஹ்மானின் இசையும் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
குரு
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க மணி ரத்னம் இயக்கத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளிவந்த திரைப்படம் குரு. இப்படத்தின் தமிழ் மதிப்பில், கதாநாயகன் அபிஷேக் பச்சன் கதாபாத்திரத்திற்கு சூர்யா டப்பிங் பேசியிருந்தார். மேலும் ரஹ்மானின் இசை படத்தின் வெற்றிக்கு பலம் சேர்த்தது.
ஆயுத எழுத்து
அரசியல் பற்றி பேசிய தமிழ் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று ஆயுத எழுத்து. சூர்யா, மாதவன், சித்தார்த், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் இன்றும் சிறந்த திரைக்கதைக்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன்
எம்.ஜி.ஆரில் துவங்கி பலரும் எடுக்கப்பட்ட ஓர் கதை பொன்னியின் செல்வன். இந்த கதையை படமாக்க வேண்டுமென பல முயற்சிகளை எடுத்து கடைசியாக 2022ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெளியிட்டார் மணி ரத்னம். இதை தொடர்ந்து 2023ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.