பல விமர்சனங்களுக்கு மத்தியில் சிறந்த இயக்குனராக கலக்கிய மோகன் ராஜா படங்கள்- ஓர் பார்வை
மோகன் ராஜா
தமிழ் சினிமா இயக்குனர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம், அதாவது படங்கள் இயக்குவதில் நிறைய வித்தியாசம் காட்டுவார்கள்.
ஆனால் இயக்குனர் ஆனதில் இருந்து ஒரு பிரபலம் மோசமான ஒரே விமர்சனத்தை பெற்றார்.
அவர் வேறுயாரும் இல்லை மோகன் ராஜா தான். இவர் இயக்குனர் அவதாரம் எடுத்ததில் இருந்து தெலுங்கு படங்களை தான் தமிழில் ரீமேக் செய்த வண்ணம், இதனால் ரீமேக் பட இயக்குனர் என விமர்சிக்கப்பட்டார்.
பின் அவர் இயக்குனர் என கெத்தாக சொல்லும் அளவிற்கு இயக்கிய படம் தனிஒருவன், இப்படத்திற்கு பிறகு மோகன் ராஜா இமேஜ் மக்களிடம் மாறியது. சரி மோகன் ராஜா இதுவரை இயக்கியதில் சிறந்த படங்களின் விவரத்தை காண்போம்.
ஜெயம் (2003)
ஜெயம் ரவி, சதா நடிக்க கடந்த 2003ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் ஜெயம். நடிகர் ஜெயம் ரவிக்கும், சதாவிற்கு அவர்களது சினிமா பயணத்தில் முக்கியமாக அமைந்த படம்.
சாதாரண வீட்டி பையனுக்கும், ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட பெரிய போராட்டத்திற்கு பிறகு இணையும் கதையே ஜெயம். நடிகர்கள், கதை, பாடல்கள் என எல்லாமே படத்திற்கு ப்ளஸ் தான்.
எம்.குமரன் S/o மகாலட்சுமி (2004)
இந்த படமும் தெலுங்கு பட ரீமேக் தான். 80களில் முன்னணி நாயகியாக கலக்கிவந்த நதியா இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார்.
இப்படம் அவருக்கு பெரிய ரீக் கொடுக்கவே அடுத்தடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் படங்கள் நடிக்கிறார்.
அம்மா-மகன், அப்பா-மகன், காதலி என எமோஷ்னலான ஒரு படம். இதில் ஜெயம் ரவி மற்றும் அசினின் ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
சந்தோஷ் சுப்ரமணியம் (2008)
ஹாசினி என்ற கதாபாத்திரத்தில் ஜெனிலியா கியூட்டாக நடிக்க ரவி சந்தோஷ் என்ற வேடத்தில் நடித்திருப்பார். தனது பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும் என கைகுள்ளேயே மகன்களை வைத்திருக்கும் அப்பா.
ஆனால் அப்பாவின் அடையாளம் இல்லாமல் தனக்கு என்று பெயர் சம்பாதிக்க வேண்டும் என துடிக்கும் மகன். இதற்கு இடையில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட அதனால் நாயகனின் வாழ்க்கையில் பல மாற்றம்.
இறுதியில் அப்பா மகனை புரிந்துகொண்டாரா, காதலர்கள் இணைந்தார்களா என்பது கதை. இதில் ஜெனிலியா மிகவும் கியூட்டான நடிப்பு பலரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.
வேலாயுதம் (2011)
தனது தம்பியை வைத்தே படங்கள் இயக்கிவந்த மோகன் ராஜா தனது 7வது படத்தை நடிகர் விஜய்யை வைத்து வேலாயுதம் என்ற படத்தை இயக்கினார். முதன்முறையாக இவர்களது கூட்டணி அமைய பெரிய எதிர்ப்பார்ப்பும் இருந்தது.
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் என பலரும் நடித்திருந்தார்கள். காமெடி, அண்ணன்-தங்கை சென்டிமென்ட், கொஞ்சம் காதல், சமூக அக்கறை என படம் எல்லாம் கலந்து கலவையாக இருக்கும்.
தனி ஒருவன் (2015)
ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமைய்யா என பலர் நடிக்க மோகன் ராஜாவின் திறமையை வெளிக்காட்டிய ஒரு படம். அதாவது 7 படங்கள் வரை ரீமேக் படங்களாக இயக்கிவந்த மோகன் ராஜா சொந்தமாக எழுதி இயக்கிய படம் தனி ஒருவன்.
இந்த படத்தை பார்த்துவிட்டு இவ்வளவு திறமையான ஒரு இயக்குனருக்கா மோசமான விமர்சனங்கள் என்று பலரும் புலம்பினார்கள். ஒரு புல் பேக்கேஜ் படமாக இருந்தது.
ஹீரோயிசம், வில்லனிசம், காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து த்ரில்லர் படமாக அமைந்தது. மித்ரன் என்ற IPS அதிகாரிக்கும் சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லனுக்கும் நடக்கும் சவாலே இந்த படம்.
வேலைக்காரன் (2017)
தனிஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிய படம் வேலைக்காரன்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா கூட்டணியில் வெளியான இப்படம் சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தான் பேசியுள்ளது.
படத்தின் கதை, அனிருத் இசை பாடல்கள் எல்லாமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.