தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்கள் ஒரு பார்வை
இயல், இசை, நாடகம் என்று கலைகளை அதிகம் வளர்த்தது தமிழகம். இதில் இசையை மக்களின் வாழ்க்கையில் இருந்து எப்போதுமே பிரிக்க முடியாது.
அப்படிபட்ட இசையை கையில் எடுத்து பாடல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்து அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தமிழ் சினிமாவின் டாப் 10 இசையமைப்பாளர்கள் பற்றிய விவரத்தை பார்ப்போம்.
இளையராஜா
ராசய்யா என்ற பெயருடன் தேனி மாவட்டத்தில் பண்ணைப்புரத்தில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் மகன்கள், உடன் பிறந்தவர்கள் என இசை துறையில் சாதித்துள்ளார்கள்.
ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்ற இவர் 1961ல் இருந்து 1968 வரை சகோதரர்களுடன் இணைந்து இந்தியாவில் உள்ள பல இடங்களில் சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டிருக்கிறார்.
இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களில 4500க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்துள்ளார். ஏழு ஸ்வரங்களுமே முழுமையாக சரணடைந்தது ராஜாவிடம் தான் என்றே கூறலாம். மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்திய ராஜாவிற்கு மேஸ்ட்ரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
பத்ம பூஷன், பத்ம விபூஷன், தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை இசை மூலம் தனது சொந்தம் ஆக்கியுள்ளார். இசையால் தமிழ் நெஞ்சங்களை 20 காலத்திலும் ஆண்டு வரும் ராஜா எப்போதுமே தமிழ் சினிமாவிற்கு ராஜா தான்.
ஏ.ஆர். ரகுமான்
இளையராஜாவின் ஆர்மோனிய இசையில் நனைந்து கொணடிருக்கும் நேரத்தில் மேற்கத்திய இசை, கரநாடக சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை எனவும், நாம் இதுவரை கேட்டிராத விதவிதமான கருவிகள் மூலம் பல பாடல்களை கொடுத்த தமிழ் மக்களை அசர வைத்து வருபவர் தான் அல்லா ரக்கா ரஹ்மான்.
ஆரம்பத்தில் விளம்பரங்களில் இசையமைத்து வந்த அவர் 1992ல் ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு அவர் பயணத்தை பற்றி புதிதாக நாம் சொல்ல வேண்டியது இல்லை.
1992 முதல் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றுள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் இவரது இசை மொழி கடந்து, எல்லை கடந்து, தேசங்கள் கடந்து இசை ஒலித்து வருகிறது.
பாப் உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனோடு மாபெரும் இசை நிகழ்வை நடத்திய ரஹ்மானை மெட்ராஸ் மொசார்ட் என அழைக்க ஆரம்பித்தார். தமிழுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் ரஹ்மானிடம் 2010ம் ஆண்டு நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பாடலை இசையமைக்கும் பொறுப்பை தமிழக அரசு இவரிடம் கொடுத்தது ஒரு சிறப்பான விஷயம்.
கொஞ்சம் வெற்றிப்பெற்றாலே அந்த புகழை தலையில் ஏற்றுக்கொள்ளும் சிலருக்கு மத்தியில் எப்போது சாதாரணமாக இருப்பார். உலக மேடையில் இந்தியாவையும் தமிழையும் பெருமைப்படுத்தி சாதனைகளைத் தன் வசம் வைத்திருக்கும் ஏ.ஆர். ரகுமான் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
யுவன் ஷங்கர் ராஜா
இவர் ஒரு போதை மன்னன், இந்திய அரசு போதை ஒரு தவறான விஷயம் என்பார்கள். ஆனால் இவர் கொடுக்கும் இசை போதை இருக்கே யாராலும் அதில் இருந்து வெளியே வரவே முடியாது.
தீம் பாடல்களுக்கு அதிகம் சொந்தக்காரர் இவர்தான், அஜித் என்று சொன்னவுடனே யுவன் ஷங்கர் ராஜா மங்காத்தா படத்தில் கொடுத்த இசை தான் முதலில் நியாபகம் வரும். இளையராஜா மகன் என்று சினிமாவில் அறிமுகமானாலும் அவரது சாயல் கொஞ்சமும் இல்லாமல் தனக்கான ஒரு அடையாளத்தை கொண்டவர.
அரவிந்தன் படம் மூலம் சினிமாவிற்கு வந்த இவர் 150 படங்களை கடந்து 24 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார். யுவன் இல்லை என்றால் எங்களது படங்கள் வெற்றியடைந்திருக்காது என்று சொல்லும் இயக்குனர்களும் உள்ளார்கள்.
யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பெரிய விருதுகள் இல்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவர் மட்டும் எனக்கு நீங்கள் கொடுக்கும் அன்பு தான் விருது என ரசிகர்களிடம் எப்போதுமே கூறுபவர்.
இவரது இசை போதையில் இனியும் நனைந்துகொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படும் ரசிகர்கள் மத்தியில் நானும் ஒருவரே.
டி.இமான்
இவர் முயற்சி செய்துகொண்டே இருந்தால் ஒரு நாள் நமக்கான காலம் வரும் என்பதை நிரூபித்தவர். 14 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த தமிழன் படத்துக்கு முத்னைமுறை இசை அமைத்தார்.
2002ல் இருந்து 2010 வரை இவர் இசையமைத்த எந்த படமும் பெரிய அளவில் ரீச் இல்லை. 2010ம் ஆண்டு மைனா படம் தான் பெரிய திருப்புமுனையாக இருந்தது. 2010ல் வெளியான கும்கி திரைப்படம் அனைத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இமானின் ஸ்பெஷாலிட்டி என்றால் ஒரே படத்தில் மெலடி மற்றும் குத்து பாடல் இரண்டிலும் அசத்தி விடுவார். முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்து இசையிலும் இப்போது மாஸ் செய்து வருகிறார்.
அனிருத்
இமானுக்கு வெற்றியை ருசிக்க பல வருடங்கள் ஆனது, ஆனால் அனிருத்தின் வழியே வேறு. முதல் படம் ஒரேஒரு பாடல் ஓஹோவென பெயர், கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ரீச், யாருப்பா இந்த பையன் படு சூப்பர் பாட்டு என பலரும் பாராட்ட அங்கே தொடங்கியது அனிருத் பயணம்.
முதல் படம் ஏதோ ரீச் அடுத்த படத்தில் பார்க்கலாம் என ஏளனமாக பேசியவர்கள் மத்தியில் எதிர்நீச்சல் என இரண்டாவது படத்திலும் சிக்ஸர் அடித்தார் அனிருத். அதனை தொடர்ந்து வணக்கம் சென்னை, மான் கராத்தே என தொடர்ந்து அவர் இசையமைத்து வந்த பட பாடல்கள் அனைத்தும் ஹிட் லிஸ்ட் தான்.
அடுத்தடுத்து ஹிட், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக குறுகிய காலகட்டத்திலேயே வளர்ந்தார். அந்த வளர்ச்சி அவருக்கு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது.
தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு கூட இசையமைத்து தனது வளர்ச்சியை மேல் நோக்கியே கொண்டு செல்கிறார் அனிருத்.
உடல் எடையை குறைத்து செம லுக்கில் நடிகை சோனியா அகர்வால்- வைரலாகும் புகைப்படம்