மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம்

By Dhiviyarajan Feb 22, 2024 01:50 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in கட்டுரை
Report

வித்தியாசமான கதைகளை இயக்கி கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் தான் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்குனர் மட்டுமின்றி பாடகர், நடிகர், இசையமைப்பளார் எனப் பல பன்முகங்களை கொண்டவர்.

இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களை பற்றி நாம் பார்க்கலாம் வாங்க..

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

அஞ்சாதே

கடந்த 2008 ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நரைன் நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் தான் அஞ்சாதே. இப்படத்தில் பிரசன்னா அஜ்மல் அமீர் மற்றும் விஜயலட்சுமி எனப் பல பிரபலங்கள் நடித்துள்னர்.

போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவன் ஒருவன், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றுபவன் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கும். இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

நந்தலாலா

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த இன்னொரு அற்புதமான திரைப்படம் தான் நந்தலாலா. மனநலம் குன்றிய ஒருவரும் ஒரு பள்ளிச் சிறுவன் ஒருவரும் தங்களது அன்னையைத் தேடிச் செல்லும் ஒரு பயணமே நந்தலாலா படத்தின் கதை..

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

மிஷ்கின் இயக்கி நடித்திருந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரில்லர் கதை களத்துடன் ரசிகர்களை கட்டிப்போட்ட மிஷ்கினின் திரைக்கதை அனைவரையும் பிரமிக்க வைத்தது.

மேலும் வழக்கமான மிஷ்கின் திரைப்படங்களில் இடம்பெறும் அன்பு தான் இப்படத்தின் அடிப்படை கதையாகும்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

யுத்தம் செய்

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். சேரன் நடித்த ஒரே த்ரில்லர் படம் இது. கொஞ்சம் ரூட்டை மாற்றித் தான் பார்ப்போமே என்று நடித்தார். படமும் ஹிட் ஆனது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

துப்பறிவாளன்

நடிகர் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்று துப்பறிவாளன். இயக்குனர் மிஷ்கின்இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, அணு இமானுவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் பெஸ்ட் கிரைம் த்ரில்லர் படங்களில் லிஸ்டில் துப்பறிவாளன் திரைப்படமும் இடம் பெற்று இருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

பிசாசு

தமிழ் சினிமாவில் ஒரே டெம்ப்ளேட்டில் பல பேய் படங்கள் வெளிவந்து இருக்கிறது. அதை பார்த்து இருக்கோம். ஆனால் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்தது. பாலா தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர். 

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்!! வாங்க பார்க்கலாம் | Best Mysskin Movies In Tamil

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US