பிரபு சாலமன் இயக்கிய சிறந்த படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க!!
இயக்குனர் பிரபு சாலமன் எடுக்கக்கூடிய படங்களில் இயற்கை சம்பந்தமான கதையும், காடு மற்றும் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும்.
தற்போது அவர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த படங்களை குறித்து பார்க்லாம் வாங்க..
மைனா
இயக்குனர் பிரபு சாலமன், கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய திரைப்படம் தான் 'மைனா' காதல் ஜோடிகளின் எதார்த்தமான காதலை கூறிய இந்த படம், அமலாபாலின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதுமட்டுமின்றி 58வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும், இப்படத்தில் நடித்தமைக்காக தம்பி ராமையாவிற்கு சிறந்த துணைநடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கும்கி
காட்டில் உள்ள யானைகளை வைத்து எடுக்கப்பட்ட கும்கி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது கும்கி படம் தான்.
முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்து இருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் சூப்பராக இருக்கும்.
கயல்
கடந்த 2014 -ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கயல். இப்படம் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமியைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி இருக்கும். இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
செம்பி
கோவை சரளா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான செம்பி திரைப்படம் கடந்த 2022 -ம் ஆண்டு வெளிவந்தது. இதில் குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் 'குக் வித் கோமாளி' புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். 10 வயதான சிறுமிக்கு நடக்கும் பாலியல் சீண்டல், நீதி கேட்கும் பழங்குடியினப் பெண்ணைப் பற்றியது தான் இப்படம்.