காதலின் மயக்கத்தில் ரசிகர்களை ஆழ்த்திய தமிழ் சினிமாவின் சிறந்த ரொமான்டிக் படங்கள் ஒரு பார்வை
தமிழ் சினிமா ரசிகர்கள் எந்த வகையான படங்கள் வந்தாலும் கதை நன்றாக இருந்தால் கொண்டாடி விடுவார்கள். அதிலும் ரொமான்டிக் படம் என்றால் அப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பே தனி தான்.
நாமும் இப்போது தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ரொமான்டிக் படங்களின் சிலவற்றை காணலாம்.
அலைபாயுதே (2000)
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமாலயா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம். தெலுங்கில் படம் சக்த என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. ஹிந்தியில் மணிரத்னம் உதவி இயக்குனர் ஷாத் அலி இயக்கத்தில் சாதியா என்ற பெயரில் ரீமேக் ஆனது.
பிலிம்பேர் மற்றும் தமிழ்நாடு மாநில விருதுகள் படத்திற்கு கிடைத்தன.
மௌன ராகம் (1986)
மணிரத்னம் இயக்கத்தில் வந்த ரொமான்டிக் படம். திவ்யா என்ற பெண் காதலர் இறந்ததால் கஷ்டத்தில் இருக்கும் அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு தனது காதலரை மறந்த அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார், இருவரும் தங்களது காதலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை கதையில் ரொமான்டிக்காக இயக்குனர் எடுத்து செல்வார்.
இப்படமும் தெலுங்கில் டப் செய்யப்பட ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆனது. தேசிய விருது, பிலிம்பேர் விருது எல்லாம் படத்திற்கு கிடைத்துள்ளது.
மூன்றாம் பிறை (1982)
பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கத்தில் வெளியான படம்.
இப்படத்தின் கதை என்ன அனைத்தும் ரசிகர்களுக்கு அத்துப்படி. இதில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் கண்ணதாசன் அவர்களால் 2 நிமிடத்தில் எழுதப்பட்ட பாடல். இதுவே அவரது கடைசி பாடலாக அமைந்துவிட்டது.
96 (2018)
இந்த படத்தை பார்த்துவிட்டு படத்தின் மீது காதலில் விழாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். கதையோ பள்ளி பருவ காதலை வெளிப்படுத்தும் ஒரு கதை, இப்படம் பார்த்துவிட்டு பலரது இளமை கால காதல் நியாபகம் வந்திருக்கும்.
பாடல், பின்னணி இசை, கதை, நடிகர்களின் நடிப்பு என எல்லாமே டாப் மோஸ்ட் ஹிட் தான். இப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் சமந்தா நடிக்க ரீமேக் ஆனது.
பாம்பே (1995)
மணிரத்னம் கை வண்ணத்தில் வெளிவந்த ஒரு ரொமான்டிக் படம். அரவிந்த் சாமி மற்றும் மனிஷா கொய்ராலா ஜோடியாக நடித்த இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது.
ஆனால் காதலில் அழுத்தமான கதையை கொண்டது. இப்பட பாடல்கள் 15 மில்லியனுக்கு விற்று அதிக விலைபோன பாடல்கள் என்ற பெருமையை பெற்றது பாம்பே.
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
ரொமான்டிக் படங்களை கொடுத்த மணிரத்னத்திற்கு அடுத்தபடியாக வந்தவர் தான் கௌதம் மேனன். இவர் 2010ம் ஆண்டு கிறிஸ்துவ பெண்ணை காதலிக்கும் எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையோடு இருக்கும் நபரை வைத்து உருவானதே இந்த கதை.
இதுவும் ரசிகர்களால் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாத லிஸ்டில் இருக்கும் திரைப்படம். இப்படம் சிம்பு மற்றும் திரிஷாவிற்கு பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.
முதல் இந்த 6 படங்களை தாண்டி அடுத்தடுத்து இருக்கும் 15 படங்களின் விவரத்தை காண்போம்.
- சேது (1999)
- துள்ளாத மனமும் துள்ளும் (1999)
- ரோஜா (1992)
- மின்னலே (2001)
- காதல் (2004)
- ராஜா ராணி (2013)
- காதலுக்கு மரியாதை (1997)
- வாரணம் ஆயிரம் (2008)
- மதராசப்பட்டினம் (2010)
நடிகை சமந்தா அவரது அம்மாவுடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- கியூட் போட்டோ