மலரும் நினைவுகள் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்கள், ஒரு சிறப்பு பார்வை
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பல விருதுகளை பெற்றவர் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இவர் 1966ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமாகி பின் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடினார்.
இவர் வெள்ளித்திரையில் பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தோடு பணியாற்றியவர். அவருக்கு 2001ல் பத்ம ஸ்ரீ விருது, 2011 ல் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
மேலும், அவர் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவர் உடல் நலக்குறைவால் 2020 ம் ஆண்டு செப்டம்பர் 25 ல் உயிரிழந்தார்.
இவரின் பாடல்கள் இன்றும் அனைவராலும் ரசிக்க பட்டு வருகிறது. இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் பாடல்கள் தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
டாப் பாடல்கள்
ரோஜா :
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ம் ஆண்டு திரைக்கு வந்த படம் "ரோஜா". இதில் அரவிந்த்சாமி, மது பாலா, நாசர் என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல் தான் 'காதல் ரோஜாவே'. இப்பாடல் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
தளபதி :
1991 ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் தளபதி. இதில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில், "ராக்கம்மா கையத்தட்டு", "சுந்தரி கண்ணால்" போன்ற பாடல்கள் எஸ்.பி.பி யுடன் இணைந்து சுவர்ணலதா மற்றும் எஸ். ஜானகி பாடியுள்ளார்.
காதலர் தினம் :
இயக்குனர் கதிர் இயக்கத்தில் குனால் சிங், சோனாலி பேந்திரே, நாசர் நடிப்பில் திரைக்கு வந்த படம் காதலர் தினம். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வாலியால் எழுதப்பட்டது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எஸ்.பி.பி "காதலெனும் தேர்வெழுதி" பாடலை பாடி அசத்தியுள்ளார்.
கேளடி கண்மணி :
இப்படம், வசந்த் இயக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ராதிகா நடிப்பில் வெளிவந்து 200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் இளையராஜா இசைமைக்க எஸ்.பி.பி "மண்ணில் இந்த காதலின்றி" எனும் பாடலை பாடியுள்ளார். இப்படத்திற்கு சிறந்த பின்னணி பாடகர் விருது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நிழல்கள் :
இப்படம் பாரதிராஜா இயக்கத்தில் 1980ல் திரைக்கு வந்தது. இப்படத்தில் சந்திரசேகர், ரோகிணி, ராஜசேகர், ரவி என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் கெடாரம் ராகத்தில் அமையப்பெற்ற "இது ஒரு பொன் மாலை" பாடல் வைரமுத்து எழுதி எஸ்.பி.பி பாடியுள்ளார்.
சகலகலா வல்லவன் :
கமல்ஹாசன் மற்றும் அம்பிகா நடிப்பில் இயக்குனர் முத்துராமன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் "இளமை இதோ இதோ" பாடல் இன்றுவரை புதுவருட கொண்டாட்டம் போது பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான பாடல். இப்பாடலை எஸ்.பி.பி அவர்கள் பாடியுள்ளார்.
காதல் மன்னன் :
இயக்குனர் சரண் இயக்கத்தில் 1998ல் திரைக்கு வந்த படம் தான் "காதல் மன்னன்". இதில் அஜித், மானு, விவேக், எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பரத்வாஜ் இசையமைப்பில் "உன்னை பார்த்த பின்பு நான்" பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
அமர்க்களம் :
1999 ல் திரைக்கு வந்த படம் அமர்க்களம். இதில் அஜித் குமார், ஷாலினி, ரகுவரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பரத்வாஜ் இசையில் வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பி பாடிய "சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" பாடல் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
மின்சார கனவு :
ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1999 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் மின்சார கனவு. இதில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் எஸ்.பி.பி படிய "தங்க தாமரை" பாடலுக்காக சிறந்த ஆண் பாடகர் விருதை பெற்றார்.
சட்டம் என் கையில் :
டி. என். பாலு இயக்கத்தில் 1978ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சட்டம் என் கையில். படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா என பலர் நடித்துள்ளனர். "சொர்க்கம் மதுவிலே" என்னும் பாடலை எஸ்.பி.பி அவர்கள் பாடியுள்ளார்.
இந்த வரிசையில் இருக்கும் பாடல்கள் மட்டுமின்றி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல்லாயிரம் பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மகளை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக எந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள் பாருங்க