தமிழ் சினிமாவில் சீன் ரோல்டன் இதுவரை கொடுத்த சிறந்த பாடல்கள்
சீன் ரோல்டன் தமிழ் சினிமாவில் கர்நாடக இசைக் கலைஞர் மற்றும் தமிழ் திரைப்பட இசையமைப்பவர்.
சீன் ரோல்டன் என்ற பெயர் என்பது அவர் மேடை ஏறிய பிறகு வந்தது, ஆனால் அவரது நிஜ பெயர் ராகவேந்திர ராஜா ராவ்.
இவர் 2014ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படம் மூலம் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் களமிறங்கியுள்ளார்.
அதன்பிறகு ஒரு 17, 18 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார், ஆனால் இவர் சினிமாவில் பாடிய பாடல்கள் தான் அதிகம் மக்களிடம் போய் சேர்ந்துள்ளன.
கண்ணான கண்ணே
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம். அனிருத் இசையமைப்பில் வந்த கண்ணான கண்ணே என பாடலை விக்னேஷ் சிவன் எழுத சீன் ரோல்டன் பாடியுள்ளார்.
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல
டி.இமான் இசையில் சிவகார்த்திகேயன்-சமந்தா இடம்பெற்ற பாடல். யுகபாரதி வரிகளை எழுதியுள்ள இந்த ஹிட் பாடலை சீன் ரோல்டன் மற்றும் ஸ்ரேயா கோஷல் இருவரும் பாடியுள்ளார்கள்.
எம்புட்டு இருக்குது ஆசை
சரவணன் இருக்க பயமேன் என்ற உதயநிதி ஸ்டாலின் நடித்த இந்த படத்தில் இடம்பெற்றது தான் எம்புட்டு இருக்குது ஆசை. இப்பாடலை டி.இமான் இசையமைக்க கல்யாணி நாயர், சீன் ரோல்டன் இருவரும் பாட யுகபாரதி வரிகளை எழுதியிருக்கிறார்.
அடியே அழகே
ஐஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் பத்மலதா மற்றும் சீன் ரோல்டன் பாடிய இப்பாடல் ஒருநாள் கூத்து என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.
இறைவனை தந்த இறைவியே
வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இடம்பெற்ற சீன் ரோல்டன் இசையமைப்பில் வந்த ஒரு அழகிய மெலோடி பாடல். தனுஷ் வரிகளை எழுத சீன் ரோல்டன் மற்றும் மானசி இருவரும் பாடியுள்ளார்கள்.
வெண்பனி மலரே
பா.பாண்டி தனுஷ் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த படம். இதில் இடம்பெற்ற வெண்பனி மலரே என்ற பாடலை தனுஷே எழுதி, பாடியும் உள்ளார்.
படு குண்டாக இருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியா இது, லேட்டஸ்ட் க்ளிக்- ஒல்லியாகிவிட்டாரா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
