செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்..

By Dhiviyarajan Feb 19, 2024 01:59 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

in கட்டுரை
Report

செல்வராகவன் 

இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்களுடைய மகனான செல்வராகவன் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "துள்ளுவதோ இளமை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமா உலகில் களமிறங்கினார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலும் படங்கள் வெளியான சமயத்தில் கொண்டாடாமல் சில வருடங்கள் கழித்து மாஸ்டர் பீஸ் என்று சொல்லி கொண்டாடி வருகின்றனர். அப்படி கொண்டாடபட்ட மாஸ்டர் பீஸ் படங்களை பார்க்கலாம் வாங்க..

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்.. | Best Selvaraghavan Movies In Tamil

காதல் கொண்டேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் கடந்த 2003ம் ஆண்டு ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக  இருந்தது யுவனின் இசை தான், இதை செல்வராகவனே பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இன்றும் இப்படத்தின் பாடால்கள் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்.. | Best Selvaraghavan Movies In Tamil

7ஜி ரெயின்போ காலனி

கிருஷ்ணா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி பிளாக் பஸ்டர் ஹிட். காலம் கடந்தும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தின் ரீ ரிலீஸ்க்கு தமிழ் நாடு ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்.. | Best Selvaraghavan Movies In Tamil

புதுப்பேட்டை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த புதுப்பேட்டை படம் கடந்த 2006ம் ஆண்டு தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் வெளியான சமயத்தில் கலைவையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும்? என்று செல்வராகவனிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு புது பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்.. | Best Selvaraghavan Movies In Tamil

மயக்கம் என்ன

மயக்கம் என்ன திரைப்படம் கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில்வெளிவந்தது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார். ஏதோ ஒரு லட்சியத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் ஒரு ஆறுதலைப் போல் அமைந்தது.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றி நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள யாமினி கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்.. | Best Selvaraghavan Movies In Tamil

ஆயிரத்தில் ஒருவன்

பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களை இப்போது கொண்டாடி வருகிறோம். ஆனால் அந்த ஜானரில் ஆயிரத்தில் ஒருவனை பல வருடங்களுக்கு முன்பே செல்வராகவன் செய்திருந்தார்.

கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இப்படம் உருவானது. இப்படம் வெளியான போது ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படவில்லை. காலம் கடந்து இப்போது கொண்டாடுகிறார்கள்.

தற்போது ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட்காக காத்துகொண்டு இருக்கிறார்கள். 

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படங்கள்!! வாங்க பார்க்கலாம்.. | Best Selvaraghavan Movies In Tamil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US