திரைப்படத்தை தாங்கி பிடிக்கும் துணை கதாபாத்திர நடிகர்கள் - ஒரு பார்வை
ஒரு திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயின்க்கு அடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் வந்து படத்தையே நகர்த்தி செல்ல காரணமாக இருப்பவர்கள் துணை நடிகர்கள். இவர்கள் பெரும்பாலும் நண்பர்கள் அல்லது காதலுக்கு உதவி செய்பவர்கள், உறவினர்கள் அல்லது எதிர்மறை கதாபாத்திரம் போன்றே கதாபாத்திரங்களில் காட்டப்படுவது உண்டு.
அப்படியான வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து திரைப்படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில முக்கிய துணை நடிகர்கள் குறித்த பட்டியலை தான் தற்போது பார்க்க இருக்கிறோம்.
எம்.எஸ்.பாஸ்கர்
தமிழ் சினிமாவின் தற்போதைய சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிக்கும் எந்த ஒரு திரைப்படத்திலும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை தனது பாணியில் நடித்து அசத்திவிடுவார். எம்.எஸ்.பாஸ்கர் எண்ணென்ற கதாபாத்திரங்களில் நம்மை மகிழ்வித்து இருக்கிறார். குறிப்பாக 8 தோட்டாக்கள் படத்தில் இவரின் கதாபாத்திரம் இப்போதும் ஹீரோக்களுக்கு நிகராக பேசப்படும் கதாபாத்திரமாக இருந்து வருகிறது.
இன்னும் கூட சொல்ல போனால் சமீபத்தில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்திலும் எம்.எஸ்.பாஸ்கர் மிரட்டியிருக்கிறார். தலைசிறந்த கலைஞராக திகழ்ந்து வரும் எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகராகவும் நம்மை மகிழ்வித்து வருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
சரண்யா பொன்வண்ணன்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படத்தின் மூலமாக கமலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் சரண்யா பொன்வண்ணன். இவர் பின்பு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வந்தார். அப்படி அவர் நடித்த பல கதாபாத்திரங்கள் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்து இருக்கிறது. அப்படி சரண்யா நடித்த வேலையில்லா பட்டதாரி, ராம், தவமாய் தவமிருந்து, எம் மகன், தென்மேற்கு பருவக்காற்று, முத்துக்கு முத்தாக, ரெமோ, KoKo என சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும் சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவின் அம்மா கதாபாத்திரங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலாக திகழ்ந்து வருகிறார். விஜய் தவிர மற்ற அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நாசர்
நடிகர் நாசர் புகழ்பெற்ற தமிழ் நடிகராக திகழ்ந்து வருகிறார், இவர் நடிப்பது மட்டுமின்றி இயக்கம், திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் பன்முக திறமையை கொண்டவராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் நாசர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஏராளம், அப்படி அவர் நடித்த கதாபாத்திரங்களில் தன்னை விட சிறப்பாக யாரும் நடித்திறமுடியாது என்றளவு செய்துவிடுவார் நாசர். அப்படி துணை கதாபாத்திரங்கள் நாசர் நடித்த தேவர்மகன், நாயகன், பம்பாய், அவ்வை சண்முகி, அன்பே சிவம், குருதி புனல், போக்கிரி என ஏகப்பட்ட திரைப்படங்கள் உள்ளன.
பசுபதி
தமிழ் சினிமாவின் தற்போதைய முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் பசுபதி, திரைப்படங்களில் இவர் வெளிப்படுத்தும் இயல்பான நடிப்பு அந்த திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாகவும் இருக்கும். வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசத்திவிடுவார் பசுபதி. அப்படி பசுபதி நடித்த விருமாண்டி, சுள்ளான், தூள், திருப்பாச்சி, வெயில், ஈ, குசேலன் பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் சமீபத்தில் அவர் துணை கதாபாத்திரத்தில் நடித்த அசுரன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற பசுபதி நடிப்பும் முக்கிய காரணம்.
தேவதர்ஷினி
குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களுக்குப் பெயர்போனவர் தேவதர்ஷினி, சின்னத்திரையில் பிரபலமாக இருந்து தற்போது பெரிய திரையில் கலக்கி வருகிறார் நடிகை தேவதர்ஷினி . ஏகப்பட்ட திரைப்படங்களில் இவர் துணை கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார், குறிப்பாக காஞ்சனா திரைப்படத்தில் கோவை சரளாவுடன் இவர் இணைந்து கலக்கும் காட்சியை எப்போ பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது.
மேலும் தற்போது தேவதர்ஷினி புதிய முயற்சியாக இந்தியளவில் பிரபலமான சீரிஸிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதன்படி சென்சேஷனலாக பேசப்பட்ட The Family Man 2 சீரிஸில் தேவதர்ஷினியின் போலீஸ் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
பிக் பாஸ் அபினை - அபர்ணா விவகாரத்தா? போட்டோ மூலம் அவர்களே கொடுத்த பதில்